தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம்  நெருங்குவதால்  அக்டோபர் நவம்பர் மாதங்களில் இலவசமாகவே வழங்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.  பொதுமக்களின்  நன்மைக்காகவும் வசதிக்காகவும் இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து அதன் மூலமாக பொருட்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தமிழகத்தின் முதன்முறையாக இந்த நடைமுறை 36,000 ரேஷன் கடைகள் செயல்படுத்த உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.