தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அப்போது பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரேஷனில் வழங்கப்படும் அரிசி,பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் மற்ற உணவு பொருட்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக பல புகார்கள் இருந்துள்ளது.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்கள் அனுப்பப்படுவதையும் ரேஷன் கடைகளில் இருந்து மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.