தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் வேலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல தரப்பினரும் பள்ளியில் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதே சமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் பாட புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.