தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை கருதி மே மாதம் பத்தாம் தேதி முதல் 15 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை மே 24ம் தேதி வரை விடப்படும் எனவும் இந்த விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு உலர் உணவுகள் வழங்க வழிவகை இல்லை.

அதேசமயம் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இரண்டு முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் 50 கிராம் சத்துமாவு மே 10-ம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கான 750 கிராம் சத்துணவை வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில்  பயனாளிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மே 10 முதல் மே 24ஆம் தேதி வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.