
மக்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதற்கு பேருந்து ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகின்றனர். இதே போல ஒரு குறிப்பிட்ட தூரம் உடைய இடங்களுக்கு ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டருக்கு பதிலாக பிரத்தியாக செயலி கொண்டு வர போவதாக போக்குவரத்து ஆணையராக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் புதிய கட்டண விபரத்தை அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும், விரைவில் அதனை அரசு அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் ஆட்டோகளுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3.50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.