
சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக விக்னேஷ் என்ற வாலிபர் தன் தாயாருக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கவில்லை என்று கூறி கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் பாலாஜிக்கு தற்போது சிகிச்சை முடிவடைந்துவிட்டது. மேலும் அவர் நேற்று வீட்டிற்கு திரும்பிய நிலையில் சில காலங்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.