தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன்  குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மகளிர் நீதிமன்றம் இந்த பரபரப்பான முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி, தனது நண்பருடன் அமர்ந்திருந்தபோது, மர்ம நபர் தாக்கியதாகவும், பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில், ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இவர் மீது 331(6), 126(2), 140(4), 75(2), 64(1) ஆகிய பிரிவுகளுடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைவிதிகள் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 30 சாட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று 75 சான்றுகள் சமர்பிக்கப்பட்டன.. இருதரப்பு வாதங்களையும் கேட்ட  மகளிர் நீதிமன்ற நீதிபதி  குற்றம் சுமத்தப்பட்ட ஞானசேகரன்  குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தார்.