தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு 2222 காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 13 மையங்களில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் இந்த தேர்வை 41,485 பேர் எழுத விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 36,400 – 1,15,700 வரை சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.