தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ஓராண்டில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முகாம்களில் வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படும். பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்ட இணைய வழியில் பதிவு செய்யப்படும்.

தகுதியான மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பட்டா மாற்ற உத்தரவுகள் இணைய வழியிலேயே பயனாளிகளுக்கு வழங்கப்படும். சென்னையை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் மொத்தமாக 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தலா மூன்று முகங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.