தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 1.63 கோடி குடும்ப தலைவிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளின் விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகளின் பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த செய்தி அந்தந்த குடும்ப தலைவிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலின் அடிப்படையில் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் இதற்கு மேல் முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.