தமிழக முழுவதும் அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் தற்போது அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு உதவும் வகையில் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.

மற்ற நாட்களில் பேருந்துகள் முழுவதும் நிரம்பாமல் காலியாக இருக்கும். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுவதால் இதனை தடுக்கும் நோக்கத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை பயணம் செய்தால் ஆறாவது முறை பயணத்தின் போது கட்டணத்திலிருந்து 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு பேருந்து கட்டணம் குறையும். ஒரு மாதத்தில் ஆறாவது முறையாக பயணம் செய்வதற்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும் எனவும் இந்த புதிய கட்டட சலுகை திட்டம் மே 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.