இந்தியாவில் அரியவகை நோய் தொற்றான GBS பரவி வருகிறது. இது பாக்டீரியாக்களால் பரவக்கூடிய அரிய வகை நோய். இந்த நோய் பாதிப்பால் தற்போது தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் வைத்தீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென கால்கள் உணர்விழுந்தது. இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். அதாவது சிறுவனுக்கு ஜிபிஎஸ் நோய் தொற்று உடன் இதய பாதிப்பும் இருந்ததால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயினால் ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரும் மேற்குவங்க மாநிலத்தில் சிறுவன் உட்பட மூவரும் உயிரிழந்த நிலையில் 100-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இந்த அரியவகை நோயினால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..