தமிழகத்தில் வீடுகளில் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை மக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். தற்போது வரை இந்த முறை அமலில் இருக்கும் நிலையில் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி செல்போனில் மின்வாரியம் மூலமாக குறுஞ்செய்தி வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் செல்போனுக்கு மின் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை கிளிக் செய்து அருகில் உள்ள பெட்டியில் கேப்சா எண்ணெய் பதிவிட வேண்டும். பிறகு பின் கட்டணம் செலுத்தும் செயல்முறை தொடங்கும். நீங்கள் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வு செய்து மின்கட்டணம் செலுத்தலாம்.