
தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தனர்.
நேற்று முன்தினம் சென்னை மயிலாப்பூரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமை தொகையை திட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.