தமிழகத்தில் மக்கள் பலரும் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து வரும் நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பல லட்சக்கணக்கானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால் தமிழக உணவு வழங்கல் துறை புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் கடந்த ஐந்து மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் அனைத்து விதமான பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் ரேஷன் கார்டை அரசு வழங்குவதற்காக பொதுமக்கள் பலரும் காத்திருக்கின்றனர். தற்போது புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அரசு அனுமதி வழங்கியவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.