தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தற்போது வரை பெரும்பாலான மக்கள் நிபாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களும் வெள்ளத்தில் சிக்கி உணவுக்கு போராடிய பொதுமக்கள் அனைவருக்கும் ஆவின் பால் மற்றும் உணவுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.

ஆனால் இந்த இக்கட்டான சூழலை சாதகமாக பயன்படுத்தி பலரும் தண்ணீர் பாட்டில் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைக்காரர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.