தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று  மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இவற்றில் தனியார் கல்லூரிகளில் மே- 1 ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.

எட்டாம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் சான்றிதழ்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். அதனைப் போலவே சேர்க்கை காண விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரிகளில் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை பொருத்தவரை பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மே 9 ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.