ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பு ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி மீன் பிடித்தால் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தற்போது கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் ஏப்ரல் 14ஆம் தேதி 12 மணிக்குள் மீண்டும் கரை திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.