தமிழகத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா போன்ற 4 உயிரியல் பூங்காக்கள் இருக்கிறது . இவை அனைத்துமே சிறந்த முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காக்கள் அனைத்தும் அரசின்  கட்டுப்பாட்டின் கீழ் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுற்றுலா சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா உயிரியல் பூங்காக்களின்  கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார். இந்த கட்டண உயர்வானது பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ச்சி பணிகளுக்கு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் ரூபாய் 115 இல் இருந்து 200 ஆகவும், பேட்டரி வாகன கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.150 ஆகவும், வீடியோ பதிவு கட்டணம் கேமரா ரூ 750 ஆகவும், சக்கர நாற்காலிக்கான 25 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், வாகன கட்டணம் நாள் கணக்கில் நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 60 ஆகவும், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு 10 ஆகவும், வீடியோ கேமராவிற்கு ரூபாய் 200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம் குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 50, 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூபாய் 10, வீடியோ கேமராவிற்கு ரூபாய் 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 30-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூபாய் 10 ம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்த பூங்காக்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு கட்டணம் ஐந்து முதல் 12 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு குழுவாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படும், அவர்களுடன் வரும் ஆசிரியருக்கு சலுகையாக ரூபாய் 20 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.