தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 96 லட்சம் முன்னுரிமை, 18. 64 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு கோதுமை 3 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இந்த மாதம் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மாதம் கோதுமை ஒதுக்கீட்டை 1038 டன்னாக மத்திய அரசு குறைத்ததால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க முடியவில்லை. இதனால் தற்போது மீண்டும் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது.