தமிழக சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக அடுத்து வரும் 2026 தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்த ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்த கூட்டணியை தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகையும் பாஜக கட்சியின் நிர்வாகியுமான நடிகை நமீதாவிடம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும். தமிழக பாஜகவினர் இடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்டிப்பாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றார்.