தமிழக முன்னாள் அமைச்சர் இ. ராமகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்தார். அதன் பிறகு அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை ஏற்றதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1991 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இவர் மருத்துவராக பயிற்சி பெற்றவர். இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.