தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நயன்தாரா நடிகர் தனுஷ் பற்றிய சமீபத்தில் பல்வேறு இவர்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகளை நடிகை நயன்தாரா தன்னுடைய ஆணவப்படத்தில் அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு நயன்தாரா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு தனுஷ் அப்பா மற்றும் அண்ணன் தயவில் தான் சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு சென்றுள்ளார் எனவும் தான் ஒரு தனி பெண்ணாய் போராட்டம் நிறைந்த சினிமா உலகில் போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் நயன்தாராவின் குற்றசாட்டுக்கு இதுவரை தனுஷ் பதிலளிக்கவில்லை. சமீபத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது ஆதாரம் இல்லாத குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல தேவை இல்லை என்றார். அதோடு தனுஷிடம் உரிமைவாங்க நயன்தாரா 2 வருடங்களாக காத்திருந்ததாக கூறுவது முற்றிலும் பொய் என்று கஸ்தூரிராஜா தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ராக்காயி பட டைட்டில் வீடியோ வெளியானது. நடிகை நயன்தாரா அதிரடியான சண்டை காட்சிகளில் நடிப்பது போன்று இந்த வீடியோ இருந்த நிலையில் தற்போது இணையதளத்தில் நயன்தாரா ஆவேசமாச சண்டை போடும் நிலையில் அசுரன் படத்திலிருந்து நடிகர் தனுஷ் மாஸாக என்ட்ரி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை உருவாக்கி அதனை வைரலாக்கி வருகிறார்கள்.