
பாலிவுட் பிரபல இயக்குனரான ஆனந்த் எல் ராய்யின் தேரே இஸ்க் மேன் என்ற புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார் கலர் எல்லோ ப்ரோடுக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார் இந்நிலையில் இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை பட குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த படத்தில் இந்தி நடிகை கிருத்தி சனோன் கதாநாயகியாக முக்தி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இந்த படம் நவம்பர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.