இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர் என்ற பகுதியை சேர்ந்த ஹாரி மாட்டின் என்ற நபர் ஒரு வித்தியாசமான பழக்கம் கொண்டவர். அதாவது இவர் தன்னுடைய சிறுநீரை தானே குடித்து வந்தார். இவ்வாறு செய்வதன் மூலமாக பத்து வயது இளமையாக தோன்றுவதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுநீரை குடித்து மன உளைச்சலில் இருந்து தான் விடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இவர் தன்னுடைய மனநோயை குணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது சிறுநீரை குடிக்க தொடங்கினார். அதற்கு யூரின் தெரபி எனவும் பெயரிட்டுள்ளார். இவருடைய இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.