
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது, கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட யாராவது தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது. சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என கூறியுள்ளனர்.