நாடு முழுவதும் சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிவிற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

இந்நிலையில்  தக்காளி விலை உயர்வை, சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடலூரில் வியாபாரி ஒருவர் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விலை ஏற்றத்தால் மக்கள் கஷ்டப்படுவதால், சேவை நோக்கத்தோடு ரூ.20க்கு விற்பதாக அந்த வியாபாரி கூறியுள்ளார். அனைவரும் வாங்க வேண்டும் என்பதால் ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வியாபாரியை மக்கள் வாழ்த்தி வருகின்றனர்