
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 9230 ரன்கள் குவித்துள்ளார். இவர் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள நிலையில் இதில் 40 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா சமீபத்தில் ஓய்வு அறிவித்த நிலையில் அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு சிலர் ஓய்வு முடிவை அறிவித்ததற்காக வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விராட் கோலிக்கு தற்போது 36 வயது ஆகும் நிலையில் அவர் நேற்று ஓய்வை அறிவிக்கும்போது இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் கடைசியாக 269 விடைபெறுகிறது என்ற குறிப்பையும் எழுதி இருந்தார். அதாவது இதில் 269 என்பது விராட் கோலியின் தொப்பி நம்பர் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமான 269 வது வீரர் விராட் கோலி. இதைத்தான் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரோடு சேர்ந்து இந்த நம்பரை கொண்ட தொப்பியும் விடை பெற்றுள்ளது என்பதைத்தான் விராட் கோலி அவ்வாறாக குறிப்பிட்டுள்ளார்.