
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கூலி மற்றும் வேட்டையன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார். அதன் பிறகு பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லிக்கு கிளம்பியுள்ளார்.
முன்னதாக இமயமலைக்கு சென்று திரும்பிய நடிகர் ரஜினிக்கு பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பது சாதனை என்று கூறினார். மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்