திரிபுராவின் வரலாற்றில் முதல் முறையாக அகர்தலாவின் ராம்நகர் சாலை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இந்திய ரயில்வேயின் உதவி லோகோ பைலட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சரக்கு ரயிலில் லோகோ பைலட்டாக தன்னுடைய வாழ்க்கையை விரைவில் அவர் தொடங்குகிறார்.

அதன் பிறகு சாதாரண பயணிகளின் லோகோ பயிலட்டாக அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த சாதனையை நிகழ்த்திய திரிபுராவின் பெருமைக்குரிய பெண் டெபோலினராய், ரண பீர் ராய் மற்றும் சந்திராணி ராயின் மகள் ஆவார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர் ரயில்வே துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார். ஒவ்வொரு இடம் பெண்ணும் தங்கள் கனவுகளை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.