ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் 700 க்கும் மேற்பட்ட ஒரு நிலையில் ஒரு தயாரிப்பு விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தையை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்  OneStation OneProduct என்ற திட்டம், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, நாட்டின் ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதன் மூலம், சிறு வகுப்பினரின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்தாண்டு இது பல மாநிலங்களில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.

இந்த கடைகளில் பாரம்பரிய ஆடைகள் உள்ளூர் விவசாய பொருட்கள், உள்ளூர் பொம்மைகள், தென்னிந்தியாவில் முந்திரி பொருட்கள், மசாலா பொருட்கள் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள் போன்றவை பயணிகள் உடைய கவனத்தை இருக்கின்றன. நாட்டின் மேற்கு பகுதியில் எம்பிராய்டரி சர்தோஷி, தேங்காய் அல்வா, உள்நாட்டு பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பதநீர் போன்றவை பிரபலமானவை.