டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் பரப்பப்படும் போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதேநேரம், செயற்கை நுண்ணறிவு ஏறத்தாழ 100 பேர் செய்யும் வேலையை செய்யும். இதனால் வேலை இழப்பும் நேரிடும். அதேபோல, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.