
உலக வர்த்தகத்தில் உருவாகியுள்ள புதிய பதற்றத்திற்கு மையமாக, இந்தியா தற்போது அமெரிக்காவிற்கு வலியுறுத்தலான பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்குச் சுங்க வரிகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியா WTO விதிகளுக்குட்பட்டு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களுக்கு ₹6,200 கோடி மதிப்பில் பதிலடி வரி விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, உலக வர்த்தக அமைப்பில் (WTO) இந்தியா தாக்கல் செய்த முறையீட்டுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பெயரில் இந்தியா, சீனா, கனடா பல உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அதிக சுங்க வரி விதித்தது. இதனால் இந்தியா பரஸ்பர வரி விதிக்கும் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தாக்கல் செய்திருந்த வரிகளை எதிர்த்து இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், அமெரிக்காவின் வாகனத் துறை, உதிரிப்பாகங்கள் மற்றும் சில தொழில்நுட்பப் பொருட்கள் மையமாக உள்ளன. இவை அனைத்தும் இந்தியாவில் பெருமளவில் நுகர்வோர் பாவனைக்கு வரும் வகையிலுள்ளன. இதன் மூலம், அமெரிக்க பொருட்களின் இறக்குமதி செலவு அதிகரிக்கப்படும் என்பதால், இந்தியா உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் இந்த முடிவு, சுயநல ஆதாரத்தில் செயல்படும் அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளுக்கு ஒரு வலுவான பதிலடி எனவும், எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. W.T.O. அளவிலும், இது மற்ற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.