இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19 புள்ளி 79 கோடி ரேஷன் அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மையமாகப்பட்டுள்ளன. இதற்கு தகுந்தது போல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் வெளிப்படை தன்மையுடன் கூடிய இணைய முகப்பு வசதியை உருவாக்கியுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் 5.33 லட்சம் ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக மின்னணு முறையிலான கைரேகை பதிவு மற்றும் பொருட்கள் வாங்கியவுடன் நுகர்வோரின் செல்போனுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டம், செறிஊட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற திட்டம் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் சென்றடைவது உறுதி செய்யும்படி மத்திய உணவு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100% டிஜிட்டல் மையமாகப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.