உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். அதன் பிறகு அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. அதே சமயம் இன்ஃப்ளுயன்சா வைரசும் அதிகமாக பரவி வருகிறது. இது கொரோனா போல வேகமாக பரவக்கூடியது என்பதால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி, கடுமையான காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரசால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.