இந்தியாவில் தற்பொழுது அதிகமாக google pay, ஃபோன்பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. மிக சிறிய தொகையாக இருந்தாலும் வங்கி கணக்கிலிருந்து அப்படியே யுபிஐ மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இந்த நிலையில் என்பிசிஐ யூபிஐ ஐடி மூலமாக பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஒரு வருடத்திற்கு மேல் எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் அந்த ஐடியை நீக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைலில் 90 நாட்களுக்கு மேல் உபயோகம் செய்யப்படாமல் இருந்தால் அந்த செல்போன் எண் வேறு ஒருவருக்கு சென்று விடும். எனவே புதிய எண்ணை வாங்கும் நபர் அந்த பணத்தை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதை தடுக்கும் விதமாகத்தான் NPCI  இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.