நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் வரும் மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச் 31ஆம் தேதி திறந்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2023-2024ஆம் நிதியாண்டு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.