புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக இறையூர் கிராம மக்கள் அறிவித்த நிலையில், வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேங்கை வயலில் உள்ள அரசு பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை முதல் மதியம் வரை 6 வாக்குகள் மட்டுமே அங்கே பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 561 வாக்குகள் உள்ள நிலையில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்காமல் இருப்பதால் அந்த மையமே வெறிச்சோடி காணப்படுகிறது.