
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாதுர் மாவட்டத்தில் வனிதா பிரகாஷ் ஷாம் என்ற 55 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு விக்ரம் பிரகாஷ் ஷாம் என்ற மகன் இருக்கிறார். இவர்களுக்கு ஒரு பூர்வீக விவசாய நிலம் இருக்கும் நிலையில் விக்ரம் தன் தாயிடம் அந்த நிலத்தை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வனிதா நிலத்தை எழுதிக் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் விக்ரம் தன் தாயை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் பிளான் போட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் தாய் தூங்கிக் கொண்டிருக்கும்போது கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டார்.
பின்னர் உடலை அருகே உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் விக்ரம் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தன் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இதைத் தொடர்ந்து போலீசார் விக்ரமை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.