1996 – 2001 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொன்முடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் எம்எல்ஏ அமைச்சர் பதவி பறிக்கப்படும்.  அதேபோல் தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளதனால் அவர் உடனடியாக எம்எல்ஏ பதவியை இழக்கிறார். மேலும் அமைச்சர் பதவியும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதிலிருந்து தப்பிக்க அவர் உயர்நீதிமன்ற அமர்வு அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று தெரிகிறது. அதன்பின் இன்றைய தீர்ப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் பட்சத்தில் அமைச்சரின் பதவி தப்பும்.