மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதம் சிறிது உயர்ந்த நிலையில், ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் தொடர்ந்து 8.2% ஆக நீடிக்கிறது.

திருமணம் ஆகி உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் செல்வமகள் சேமிப்பு திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் ஆபத்து இல்லாத திட்டம். இந்த திட்டத்தின் பெயரில் பெயர் சுகன்யா  சம்ரிதி யோஜனா. அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் உங்களுடைய பெண் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கி சேமிக்கலாம். பெண்ணுக்கு 21 வயது ஆன பிறகு முதிர்வு தொகை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் எட்டு சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில் காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வட்டியை அரசு உயர்த்தியதால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.