
கடந்த ஆண்டு அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்போனில் பேசியபடியே கார் ஓட்டி சென்றுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது youtube பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் மதுரை அண்ணாநகர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.