பீதர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் என்ற 25 வயது இளைஞர் பெங்களூரில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கி இருந்தார். அதே அறையில் அவருடன் சில பேர் தங்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவே சீனிவாஸ் சாப்பிடுவதற்காக புறப்பட்டார். அப்போது தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு செல்ல அவர் முடிவு செய்த நிலையில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென்று அவர் மீது மின்சாரம் பயந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே சீனிவாசை காப்பாற்ற அவருடன் தங்கி இருந்த ஒருவரும் முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் லேசான காயத்துடன் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.