அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆனி வர்ஷா அபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர் சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து கிளம்பினார். அப்போது அங்கிருந்த ஏராளமானோர் ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க முன் வந்தனர். ரோஜா அவர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையில் அங்கு வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களும் புகைப்படங்கள் எடுக்க முன்வந்தனர். அப்போது தூய்மை பணியாளர்கள் ரோஜாவுடன் நின்று புகைப்படம் எடுக்க நெருங்கி வந்தபோது, ரோஜா அவர்களை தள்ளி நிற்குமாறு கை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரோஜாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.