நாட்டின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலின் பயணச் சீட்டு கட்டண விவரங்களை தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இதன்படி சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1620 என்றும், ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலை வரும் 24ம் தேதி, பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.  இந்த ரயில் சென்னையில் இருந்து 8 மணி நேரத்தில் நெல்லை சென்றடைந்துவிடும். விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் இந்த வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்.