சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ திட்டங்கள் பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் சென்னையில் லைட் மெட்ரோ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த திட்டம் மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படும் பகுதிக்கு அருகில் உள்ள இடங்களை இணைக்க உதவும் என்று கூறப்படுகிறது. பொதுவாக ஒரு மெட்ரோ திட்டங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு உயர் மட்ட பாதை அமைக்க 200 முதல் 250 கோடி வரையும், சுரங்கப்பாதை அமைப்பதற்கு 500 முதல் 550 கோடி வரையும் செலவாகும். ஆனால் இந்த திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு உயர் மட்ட பாதை அமைக்க 100 கோடி மட்டுமே தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.