கடந்த வாரம் வெளியான வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய இரண்டும் வாழ்வியல் சார்ந்த படங்களாக தியேட்டர்களில் வெளிவந்தது. இந்நிலையில் வாழை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் கொட்டுக்காளி திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்த்த அளவு நல்ல விமர்சனங்கள் வரவில்லை.

இந்நிலையில் பெண் ஒருவர் கொட்டு காளி குறித்து பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தயாரிப்பாளரான  சிவகார்த்திகேயன் சூரி- யை கவுத்து விட்டுட்டாரு , பிளான் பண்ணி அவருடைய மார்க்கெட்டை கீழே இறக்கிட்டாரு நம்முடன் காமெடியாக நடித்த நடிகன் அடுத்தடுத்த படங்களில் ஹிட் கொடுப்பதை பார்த்து நமக்கு மேல் சென்று விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இப்படி செய்து விட்டார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவும் மிகவும் சுமாரான படமாக இருப்பதாகவும் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். சிலர் இது வாழ்வியல் சார்ந்த ஆர்ட் ஃபிலிம் இது அப்படித்தான் இருக்கும். உண்மையில் பொட்டுக்காளி சிறந்த திரைப்படம் தான் என பல சினிமா ரசிகர்களும் பிரபல இயக்குனர்களும் கொட்டு காளி குறித்து நல்ல விமர்சனங்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.