பால்வழி மண்டலத்திற்கு மிக தொலைவில் புதிய விண்மீன் திரளாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள சில ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் எனும் விண்வெளி தொலைநோக்கி மூலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதால் அதில் கண்டறியும் சில உண்மைகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதன்படி பூமி உருவானதற்கு பிறகு 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் முன் இருக்கும் புதிய விண்மீன் திரளை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடித்த அனைத்து நட்சத்திரங்களையும் மொத்த எடை குறித்து கணித்ததில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அங்குள்ள நட்சத்திரங்களின் மொத்த எடை சூரியனை விட 100 மில்லியன் மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த தகவல் குறித்து ஆராய்ச்சிகள் இருந்ததைவிட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.