
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இந்த நிலையில் டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா நடிப்பில் ஐடென்டிட்டி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் வினை ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐடென்டிட்டி திரைப்படத்தை அகில் பால், அனஸ்கான் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த படத்தை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
டோவினோ தாமஸ் ஐடென்டிட்டி படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவான ஐடென்ட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படம் ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அறிவித்த நிலையில் தற்போது ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.