இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா மாகாணத்தில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த மலையில் மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் 75க்கும் அதிகமான வீரர்கள் மலை மீது ஏறிக் கொண்டிருந்தனர். இந்த மலையின் 9800 அடி உயரத்தில் எரிமலை ஒன்று அமைந்திருந்தது.

இந்நிலையில் நேற்று திடீரென அந்த எரிமலை வெடித்துள்ளது. இதனால் தீக்குழம்பு வெளியேறி டன் கணக்கில் சாம்பல் அருகில் இருந்து கிராமத்தை மூடியது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதனிடையே மலையேற்றத்தில் ஈடுபட்ட வீரர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

50 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 11 பேர் உயிரிழந்ததாக அவர்களது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் 22 வீரர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.